story-appa-amma அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்திருந்தான். அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை; லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்ட போதும், யாரும் எடுக்கவில்லை. ‘சரி… இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்…’ என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினர். 15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி. அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான். ‘ரிங்’ போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர். ”மாமா… அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா… போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,” என்றான். ”உனக்கு விஷயமே தெரியாதா… உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா…” ”இல்லயே மாமா… என்ன விஷயம்?” ”உனக்கு தெரியாதது ஆ...