என் மாமியார்
என் மாமியார்
என் மாமியார் ஒரு பழமை விரும்பி
பெண்ணுக்கும் மாட்டு பெண்ணுக்கும்
வித்யாசம் தெரிந்தவள்
தனக்குப்பின் தன் நகைகளை பெண்ணுக்கு போட்டால்
வேறு குடும்பத்தை போய் சேரும் என்று
நன்கறிந்தவள்
மாட்டு பெண்
தன்னை எப்படி நடத்தினாலும்
நகைகள் தன் குடும்பத்தில் (அதாவது மாட்டு பெண்ணிடத்தில் ) தான் இருக்கவேண்டும்
என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள்
பெண் தன்னை விழுந்து விழுந்து
கவனித்தாலும்
அது அவள் கடமை -தனக்கு பெண் ஆனதினால்
ஒரு சமயம்
உடம்புக்கு முடியாமல் போயிற்று
கூப்பிட்டகுரலுக்கு ஆள் இல்லை
மாட்டு பெண்ணோ ஆஃபிஸில்
பெண்ணை விடுவாளோ அவள் மாமியார் ?
கேட்டுத்தான் பார்ப்போமே
அலைபேசி …
கொஞ்சம் பாக்கியத்தை அனுப்ப முடியுமா —உடம்பு என்னவோ போல இருக்கு
அம்மா நான் பாக்கியம் பேசறேன்
உடனே (மாமியாரிடம் சொல்லிவிட்டு) புறப்பட்டுவரேன்
வந்தாள்…டாக்டரிடம் கூட்டிக்கொண்டுபோனாள்
மருந்து வாங்கினாள்
வீட்டில் வந்து சிச்ருஷை செய்தாள்
வரேன் அம்மா
மாமியாரை கவனிக்கணும்
போதிமரம் …
கல்யாணமாகிவிட்டாலும் பெண்
தன் பெண் தான் –வேற்றுமனுஷி அல்ல
நகைகள் பாதி அவளுக்கும் கொடுப்போம்
தீர்மானம்
என் மாமியார்
Comments
Post a Comment