குழந்தை திருட்டு
குழந்தை திருட்டு
மருத்துவ மனையில் குழந்தை திருட்டு
பத்திரிகையில் படித்தவுடன் மாலதிக்கு மனதில் ஒரு பயம்
cctv காமெராக்கள்சரியாக இயங்காததால் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியவில்லை
நான் போற ஆஸ்பத்திரியில்?
ஏனா… அந்த ஆஸ்பத்திரியில் cctv கேமராவேலை செயறதான்னு கேட்டுவாருங்களேன்
ஏண்டி தீடீரென …
பேப்பரை பாத்தேளா
ஓ புரிஞ்சது
இன்னைக்கே கேட்டுடறேன்
அப்புறம் எங்கம்வாவை வர சொல்லுங்கோ
ஏண்டி
முதலே சில விஷயங்கள் சொல்லிடணும்
ஆஸ்பத்திரியில் கொழந்தையை யார்ட்டயும் கொடுத்தரப்படாது
நர்ஸானாலும் ஆயாவானாலும் சரி
கொழந்தை காலிலே ஒரு கருப்பு வளையல் போடணும் அடையாளத்துக்காக
அவ tag போடுவாளேடி
tagai மாத்தினா?
எதக்கும் இருக்கட்டும் …சரி சரி
ஏன்னா
என்னடி
நீங்களும் கூடவே இருங்கோ
ஆம்பிளைகளை விட மாட்டாடி
வெளியிலே நின்னு watch பண்ணுங்கோ
சரி
ஆ…
என்னடி
வலி ஆரமிச்சாச்சு அம்மாவுக்கு phone போடுங்கோ
சீக்கிரம்…. அப்பா….அம்மா
பிரசவ வார்டு …தங்க மகள் கையில் கருப்பு வளையல்
ஏன்னா ..ஜாகிரதை
அம்மா கூடவே இரு …பகவானே நல்லபடியா என் கொழந்தையை
இங்கேருந்து வீட்டுக்கு கொண்டு போணோமே
எனா வாசல் செக்யூரிட்டி டெ 100 ரூபா கொடுத்துட்டு
கருப்பு வளையல் போட்ட கொழந்தை வந்தால் வெளியே விடாமே ஒங்களுக்கு போன் பண்ண சொல்லுங்கோ
cctv விசாரிச்சேளா
போய் பார்த்துட்டு வாங்கோ
காமிக்கமாட்டடி
100 ரூபா கொடுத்தாஎல்லாம் பண்ணுவ
சரிடி
—
டிஸ்சார்ஜ் ..
அம்மா.. ஏன்னா
எங்கொழந்தை தானே இவ?
——————————
புலம்பல்
அம்மா அம்மா …
9 மாசம் வயித்திலே பார்த்து பார்த்து
கஷ்டப்பட்டு கதறி பெற்று
பிரசவ ஆஸ்பத்திரியில்
கோட்டை விட்டேனே …
கெடச்சுருவாடி
பகவான் …..
பெயரை சொல்லாதே பத்திண்டுவரது
கைலாசத்திலும் வைகுண்டத்திலும்
பிரசவ ஆஸ்பத்திரி இருந்தால் தெரியும்
என் மாதிரி அம்மாக்கள் படும் பாடு
கொழந்தை கிடைச்சாச்சு
யார் கொழந்தை?
——————————————————————————————————————
அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் கண்காணிப்பு கேமரா 24 மணிநேரமும் செயல்பட வேண்டும். பிறந்த குழந்தையை பெற்றோரை தவிர வேறுநபரிடம் ஒப்படைக்க கூடாது. மருத்துவ மனையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடன் போலீசாருக்கு தகவல் தரவேண்டும். குழந்தையை யாராவது தத்தெடுக்க கேட்டால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும். குழந்தை திருட்டை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் ஒத்துழைப்பு அவசியம் .
மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டை தடுப்பதற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பயோ மெட்ரிக்’ முறை வசதி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விரைவில் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் தாயின் விரல் ரேகை வைத்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும் பெட்டி திறக்கும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரப்படும் என மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்
Comments
Post a Comment