தாத்தா பேத்தி
தாத்தா பேத்தி
நடை பயணம்
பேத்தியை ப்ராமில்
தாத்தா நடத்தி சென்றார்
போக வர எல்லாருக்கும்
டாடா
அவர்களும் புன்னகையோடு
கவலைகளுக்கு சிறிதுநேரம்
டாடா
மனிதர்கள் இல்லா வீடுகள்
பறவைகள் இல்லா மரங்கள்
தாத்தா பேத்தி பார்வையில்
வழியில் நாய் மாடு காக்கா
பேத்தி குதூகலம்
தாத்தா கை சோர்வு
மனம் நிம்மதி
இறைக்கு நன்றி
வாழ்வில் இந்த
பாக்யத்துக்கு
தாத்தா பேத்தி பயணம்
தொடருமா?
Comments
Post a Comment