வில்லாக்களின் பேச்சு
வில்லாக்களின் பேச்சு
ஒரு பெரிய பங்களா …இப்போ வில்லா சொல்லுவார்கள்
பக்கத்தில் புதுசா கட்டப்பட்ட இன்னொரு பங்களா
ஆள் நடமாட்டமே இல்லை
முதல்வன் :ஏம்ப்பா என்ன செய்யிர
இரண்டமவன் :க்கும் என்ன செய்ய முனிவர் சொன்னமாதிரி செய்யிறேன்
அதுஎன்னப்பா
சும்மா இருக்கேன் ..ஆமா நீ?
பரம சுகம் ..ஒரு சலனமில்லை சப்தமில்லை
எதுக்காக கட்டப்பட்டோம்?
சுய திருப்தி ,பணபலத்தை வெளிப்படுத்த ஒரு வழி
இரண்டு வீட்டிலும் சேர்ந்து 40-50 பேர் வசிக்கலாம் அல்லவா
தாராளமா
அதற்கு மற்றவர் சொந்தபந்தம் இல்லையே
அப்படியே இருந்தாலும் நெருங்கிய சொந்தம் இல்லையே
அப்பா அம்மா வையாவது….
அவர்கள் இல்லத்தில்(முதியோர்) சௌக்யமாக இருக்கார்கள்
நீயும் நானும் ..நம்மைப்போல் பலரும் பக்கத்திலும் எதிரிலும்
இது upper class neighbourhood
வில்லாக்கள் வசிக்கலாம்
மனிதர்கள் ?
அவர்களுக்கும் உண்டு
புறாக்கூண்டுகள் குடிசைகள் நடைபாதை
பணத்திமிரின் மௌனசாட்சிகள் நாம்
Comments
Post a Comment