அனாதை
அனாதை
தேவை பெற்றோர்
நான் காத்திருக்கிறேன்
அப்பா அம்மாவுக்காக
பிறப்பிடம் குப்பைத்தொட்டி
வளர்கிறேன் ஆஸ்ரமத்தில்
அனாதை என்ற பெயரோடு
கம்ப்யூட்டர் கற்றேன்
அமேசானில் தேடுகிறேன்
அம்மா அப்பாவை
prime delivery 2 நாட்களில்
என் அம்மா என்னை நினைத்திருப்பாளோ
(தளபதி சினிமாவைப்போல் )
குப்பைதொட்டிகளை காண்போதெல்லாம்
எப்போதாவது வந்து பார்த்திருப்பாளோ
நான் எப்படி வளர்கிறேன் என்று ..
அப்பா ஏன் தடுக்கவில்லை
அவருக்கு நான் பிறந்ததே தெரியுமா
நாங்கள் அனாதைகளா
இல்லை இல்லை
எங்கள் அன்பு பாசம் இல்லாமல் வாழ்கிற “பெற்றோர்கள் ” தான்
உண்மையான அனாதைகள்
நான் காத்திருக்கிறேன்
அப்பா அம்மாவுக்காக
எங்களையும் இறையின் குழந்தைகள் என மதித்து
அன்போடு அரவணைத்து மகிழும்
தத்துப்பெற்றோர்க்காக
Comments
Post a Comment