மறதி

 

மறதி

“நான் ரெடி ”

அவர் புதிய பட்டு வேஷ்டியும் அங்கவஸ்திரவுமாய்

நான் :”என்ன விஷேஷம் தீடீரென ”

“என்னடி மறந்துட்டயா -பாப்பா பேத்தி கல்யாணமோனோ ”

“அட ப்ராஹ்மணா athu நேத்திக்கே முடிஞ்சாச்சு

போய் மூக்கு பிடிக்க வெட்டினதை மறந்துட்டேளா ”

போடி போடி இன்னைக்குத்தான் கல்யாணம் வேணுமான்னு பத்திரிகை பாரு

பார்த்தார் …மௌனம்

என்ன

ஆமாண்டி எப்படி மறந்தேன் ..சாப்பிட்டது கூட நினைவில்லை

மறதி நோயோ ?

இப்படித்தான் ஆரம்பம் அவஸ்தை


ஏண்டி ……

ஏண்டி…..

சட் பேர் மறந்துபோச்சே

இவளே

ஏன்னா என்னவேணும்

அலமு?

யார் அலமு?

ஒன்னும் இல்லை

தீடீரென அலமுனு சொல்றேள் ..கேட்ட ஒண்ணுமிலே ஏன்னா என்னாச்சு

அதில்லை பங்கஜம்

ஐயோ என்னவோ ஆச்சு உங்களுக்கு அலமு எங்கிறேள் பங்கஜம்ங்கிறேள்

கத்தாதே ..கேட்டா சிரிப்பே

உன்பேரு மறந்துபோச்டி

அடப்பாவி மனுஷ 35 வருஷ தாம்பத்ய வாழ்க்கை..

ஓஹோன்னு இல்லாட்டாலும் சுமார்..

இப்போ பேரும் போச்சா

கம்ப்ளீட்டா மறந்து போச்சுடி

எப்போ கல்யாணம் ஆச்சு எத்தனை குழந்தைகள் என்ன என்ன வாழ்வு

எல்லாம் ஞாபகம் …ஆனால் ஓம்பெரு மாத்திரம் …

(அழுது கொண்டே ) ஆசையா மங்களம் மங்களம்னு பாடுவேளே

நான்.. ?

——-

In the early stage of Alzheimer’s, a person may function independently. He or she may still drive, work and be part of social activities. Despite this, the person may feel as if he or she is having memory lapses, such as forgetting familiar words or the location of everyday objects.


Friends, family or others close to the individual begin to notice difficulties.

——-

doctors ஆபீஸ்

என்ன பஞ்சாபகேசன் எப்படி இருக்கேள்

பைன் டாக்டர் இவைதான் என்னமோன்னு பயந்து …

நான் சில questions கேட்கட்டுமா ..டக்ன்னு பதில் சொல்லணும்

இவை பேர் என்ன (wifei நோக்கி )

மௌனம்

சரி எந்த ஆஃபிஸில் ஒர்க் பண்ணினேள்

அது ..railways

(pwd யில் 30 வருஷம் குப்பை )

கொஞ்சம் எழுந்து அந்த பேனாவே தறேளா

சிரமப்பட்டு போய் ..பாதியில் திரும்பினார்

மாமி அழுகை


சரி இந்த பேப்பரை படியுங்கோ

2 வரி படித்தவுடன்

என்ன படிச்சேள்

மௌனம்

ஓகே தட்ஸ் ஆல் பஞ்சாபகேசன்

எனக்கு என்ன டாக்டர்

வயசு.. கொஞ்சம் மறதி..மருந்து சாப்பிட்டால் போச்சு


During a detailed medical interview, doctors may be able to detect problems in memory or concentration. Common difficulties include:


Problems coming up with the right word or name

Trouble remembering names when introduced to new people

Challenges performing tasks in social or work settings.

Forgetting material that one has just read

Losing or misplacing a valuable object

Increasing trouble with planning or organizing

————————————–

எனக்கு டெல்லி போணும்

அங்கே என் பிள்ளை இருக்கான்

ஏன்னா (அழுகை ) நமக்கு ஒரே பொண்ணுதானே

அப்போ டெல்லிலே யார் >

உங்க சித்தப்பா பிள்ளை

திடீரெனெ கோபம்

நான் என்ன சொன்னாலும் தப்பு இல்லையா யார் என்னை மதிக்கறா

டேபிள் மேலே இருந்த டம்பளரை கீழே போட்டு டமால்

ஏன்னா போய் குளிச்சுட்டு வாங்கோ

எத்தனை தடவை தான் குளிக்கறது

நீங்க நேத்திக்கே குளிக்கலயே

நான் மாட்டேன்

நான் …. எனக்கு ….


You may notice the person with Alzheimer’s confusing words, getting frustrated or angry, or acting in unexpected ways, such as refusing to bathe. Damage to nerve cells in the brain can make it difficult to express thoughts and perform routine tasks.


At this point, symptoms will be noticeable to others and may include:


Forgetfulness of events or about one’s own personal history

Feeling moody or withdrawn, especially in socially or mentally challenging situations

Being unable to recall their own address or telephone number or the high school or college from which they graduated

Confusion about where they are or what day it is

The need for help choosing proper clothing for the season or the occasion

Trouble controlling bladder and bowels in some individuals

Changes in sleep patterns, such as sleeping during the day and becoming restless at night

An increased risk of wandering and becoming lost

Personality and behavioral changes, including suspiciousness and delusions or compulsive, repetitive behavior like hand-wringing or tissue shredding


the emotional effects that Alzheimer’s can have on the family and/or care takers can be rippling, lasting for years and years. It is important to note that self-care can be really important to account for, but isn’t an answer that all families can act upon. Consider seeking out community based support groups or professional help if you or other family members feel depressed or anxious. Respite care can bring a great deal of relief during the time of care taking; making sure that you take breaks as needed from this is crucial. The stress of a loved one suffering from Alzheimer does take a toll emotionally and can make waves in the family. The lasting effects and aftermath can be devastating, anything from lasting physical effects on your health, to emotional and mental effects as well. Remember, you are not alone in feeling these effects. It’s crucial to seek out the right supportive services as you navigate this complex disease.



Comments

Popular posts from this blog

தனிமை

தாத்தா பேத்தி

i am the SYSTEM