சகுந்தலை
சகுந்தலை
காட்டில் கன்வரால் கண்டெடுக்கப்பட்ட கன்னி
பால்யம் …மானோடும் மயிலோடும் தோழிகளோடும் அமைதியான ஆஸ்ரம வாழ்க்கை
குறுக்கிட்டான் அவன்..துஷ்யந்தன்
வாழ்வு மலர்ந்தது இனித்தது
மானை மறந்தாள் தோழிகளை மறந்தாள்
அவனே எல்லாம் …
ஐயகோ !
முனிவரையும் மறந்தாள்
பிடி சாபம்
அவன் மறப்பான்
காலை பிடித்தாள் …மன்னிப்பு மன்னிப்பு
நான் உங்கள் பெண்
கனிந்தான் முனி
காலம் கனியும்
மீண்டும் இணைவீர்
மகன் பிறப்பான் நாடாள்வான்
சகுந்தலை அன்னத்தோடு பேசினாள்
என் அம்மாவைபோல் நானும் ஆவேனோ
(மேனகாவை விஸ்வ மித்திரர் கைவிட்டார் )
என் குழந்தையும் காட்டில் பிறப்பானா
ஆண்களே இப்படித்தானோ
இல்லை இல்லை கன்வரப்பா அப்படியில்லை
அம்மா அம்மா எங்கிருக்கிறாய்
நாதன் இல்லா வாழ்வு கசக்கிறது
என்னை கொண்டுபோ
—-
சில வருடங்களுக்கு பிறகு
துஷ்யந்தன் மடியில் பரதன்
மீண்டும் அமைதி
ஆனால் பெண்புத்தி ….
மீண்டும் மறந்தால்?
Comments
Post a Comment