நான் கடற்கரை
நான் கடற்கரை
சுமாரான கரை என் பணக்கார அண்ணன்களை போல அல்ல (மரீனா எல்லியட்ஸ்)
சாமான்யர்கள் கூடும் இடம்
இன்று நல்ல கூட்டம் 5மணிக்கே (சனி அல்லவா)
எத்தனை எத்தனை விதமான மக்கள்
காதலர்கள் கணவன்-மனைவி(இளம்) வயோதிக தம்பதிகள்
நண்பர்/நண்பி-கள் குழந்தைகள் -அம்மா-அப்பாக்கள்
யாருமில்லாமல் தனியே வந்த ஆண்கள் (அபூர்வமாக பெண்கள்)
விருந்தாளிகளோடு வந்த உறவுகள்
கண்களைத்தேடி அலையும் இளைஞர்கள்
கரை அருகில் தனி கூட்டம்—காட்சிகள்
சிலர் கரையை கடலை ஆகாயத்தை காற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு
self -போனில் (selfi -போன்) உலகை மறந்து
சிலர் விளையாட்டு அலைகளோடு -குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில்
சிலர்மட்டும் தனியே அமர்ந்து
கடலை வானத்தை அலைகளை
மௌனமாக ரசித்துக்கொண்டு
அங்கங்கே கூட்டம் குவியும் கடைகள் …
பஜ்ஜி சனமசாலா அமெரிக்கன் கார்ன் வால்ல்ஸ் potato பாப்ஸ் பிரெஞ்சு fries பிரட் omlette கூல் ட்ரிங்க்ஸ் ….எல்லாவற்றுக்கும் கூட்டம்
நான் கடற்கரை
சுமாரான கரை என் பணக்கார அண்ணன்களை போல அல்ல (மரீனா எல்லியட்ஸ்)
சாமான்யர்கள் கூடும் இடம்
இன்று நல்ல கூட்டம் 5மணிக்கே (சனி அல்லவா)
எத்தனை எத்தனை விதமான மக்கள்
காதலர்கள் கணவன்-மனைவி(இளம்) வயோதிக தம்பதிகள்
நண்பர்/நண்பி-கள் குழந்தைகள் -அம்மா-அப்பாக்கள்
யாருமில்லாமல் தனியே வந்த ஆண்கள் (அபூர்வமாக பெண்கள்)
விருந்தாளிகளோடு வந்த உறவுகள்
கண்களைத்தேடி அலையும் இளைஞர்கள்
அங்கங்கே கூட்டம் குவியும் கடைகள் …
பஜ்ஜி சனமசாலா அமெரிக்கன் கார்ன் வால்ல்ஸ் potato பாப்ஸ் பிரெஞ்சு fries பிரட் omlette கூல் ட்ரிங்க்ஸ் ….எல்லாவற்றுக்கும் கூட்டம்
கரை அருகில் தனி கூட்டம்—காட்சிகள்
சிலர் கரையை கடலை ஆகாயத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு
self -போனில் (selfi -போன்) உலகை மறந்து
சிலர் விளையாட்டு அலைகளோடு -குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில்
சிலர்மட்டும் தனியே அமர்ந்து
கடலை வானத்தை அலைகளை
மௌனமாக ரசித்துக்கொண்டு
சிலர் ஓரமாக நடந்துகொண்டே ஓரக்கண்ணால்…
மணற்பரப்புக்கு சற்று தூரத்தில் தனி உலகம்
கடலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதபோல்
சில பல குட்டி stall கள்
மக்கள் உண்ணுவதே குடிப்பதே குறிக்கோள்
கடல் ஒரு சாட்சி மாத்திரம்
அங்கு ஓர் மூதாட்டி
அமெரிக்கன் கார்னை (பட்டர்-சால்ட்)
ஊட்டுகிறாள்
wheel -chair கணவனுக்கு
இங்கு
முக்கா பேண்டில்(pant ) ஓர் மாடர்ன் இளைஞன்
வாழக்கா பஜ்ஜியில் மெய்ம்மறந்து
அதோ
மணல் பரப்பில்
மும்முரமாக
சர்ச்சை -யார் வரப்போகிறார்கள்— ரஜினி?
மணலை தோண்டி கோட்டை கட்டுவதில் மும்முரம்
பெண் மௌனமாக மணலை அளைந்துகொண்டு
ஆண் சொல்வதை கேட்டும் கேட்காமலும்
இவர்களுக்கும் கடலுக்கும் சம்பந்தமே இல்லை
மணல் தான் எல்லாம் தாய் தந்தை ஆசான் சாட்சி
பலூன் ஐ துப்பாக்கியால் சுடுவதிற்கு ஓர் கும்பல்
அதையே வேடிக்கை பார்க்க மற்றொரு கும்பல்
குழந்தைகள் ராட்டினம்
உலகமே சுற்றுவதுபோல்
சுற்றும் சிறார்கள்
இவை அனைத்திற்கும் சாட்சி
அலைகள் கடல் காற்று வானம்
நேரம் ஆக ஆக கூட்டம் கூடுகிறது
அலைகள் ஓசையைவிட
மக்கள் ஆரவாரம்
மணி 7
கூட்டம் மெல்ல மெல்ல நகர்கின்றது
stall -கள் அடைக்கப்படுகின்றன
அலையோரம் வெறிச்சோடியது
மணல் கோட்டைகள் தனித்தாயின
மணி 7 .30
நிசப்தம்
அலை ஓசையும் காற்றும் வானம் நிலவும் மாத்திரம்
அல்ல அல்ல
இறையும் கூட
Comments
Post a Comment