சென்னை சில்க்ஸ்
சென்னை சில்க்ஸ்
நான் சென்னை சில்க்ஸ் கட்டட ராணி
7 மாடி பிரம்மாண்டம்
கோடிக்கணக்கில் நகைகளும் புடவைகளும் உள்ளடிக்கிய
1000 ஊழியர் சேவை செய்ய
ஒய்யாரமாக நகரில் (டீ)
ஆட்சி செய்து வந்தேன்.
லட்சக்கணக்கான பிரஜைகள் (மக்கள்) என் ராஜ்யத்தில்
தினம் தினம் கப்பம் கட்டி
புடவை நகை பெற்றுச்செல்வார்
புடவை நகை செய் தொழிலாளிகள் எத்தனை எத்தனை
கோடிக்கணக்கில் வியாபாரம் வருமானம்
ஆயிரக்கணக்கான பிரஜைகள் உழைப்பும் ஒத்துழைப்பும் கொண்ட
சாம்ராஜ்யம்
யார் யார் கண் பார்வையோ
என்ன என்ன பெருமூச்சுகளோ
என் basmentஇல் தீ !
மெல்ல மெல்ல
அணைப்புக்கு அடங்காமல்
ஆஹா நல்ல தீனி !
7 மாடி தீனி !
பகலென்ன இரவென்ன
பரவி பரவி எரிந்து எரிந்து
கரிந்த பிரம்மாண்டம்
நான் சென்னை சில்க்ஸ்
எரிந்துகொண்டே நினைத்தேன்
எத்தனை எத்தனை புடவைகள்
அவை புடவைகளா ?
நாட்கணக்கில் வேர்வை சிந்திய
தொழிலாளிகளின் ரத்தம்
(கவனிக்கவும்….நகைகளுக்கு சேதமில்லை)
எரிகின்ற புடவை நினைத்தது …..
எங்களுக்கு லாக்கர் இல்லாமே போச்சே!
திருப்பி வருவேன் phoenix பறவைபோலே
(சொன்னது முதலாளி)
தீபாவளிக்கு
பழைய
உங்கள்
சென்னை silks
அதுவரை ..
என் பழைய கருகிய உடல்
jaw cutters ஆல்
உடைவதை கண்டு (வீடியோவில்)
மெல்ல மெல்ல உயர்ந்து
இந்தமுறை
எல்லா விதிமுறைகளுக்கு உட்பட்டு
புது பொலிவுடன்
வளர்வதை கண்டு களியுங்கள்
see யு ஆல்
Comments
Post a Comment