பஸ்
பஸ்
பஸ் தனக்குள் பேசிக்கொண்டது
பஸ் போகாது பஸ் போகாது
பேசறா
நான் ரெடி
நீ (மனிதன் ) ரெடியா
பஸ்கள் strike பண்ணாது
மனுஷங்க தான்…..
ஆ ஊனா
என்னை கல்லால் காயப்படுத்தி
எரிக்கறா
உங்கள் கோபத்தை இயலாமையை
வெளிப்படுத்த
நான் தானா கிடைத்தேன் ?
ஏன்
மனுஷங்களை
எரிக்கமாட்டேங்கிறீங்க
பஸ் கட்டண குபீர் உயர்வு
என்னால் செலவு அதிகரிக்கவில்லை
உங்கள் பேராசைதான் காரணம்
நான் பல பல பிரயாணிகளை நெடுந்தூரம் மென்மையாக சுமந்து அவரவர் செல்லுமிடத்திற்கு
கொண்டு விடுகிறேன்
என்னை கவனிக்க யாரும் இல்லை -உடைந்த ஜன்னல்கள் கிழிந்த சீட்கள்
எப்போதாவது உடம்பு சரியில்லாத காரணத்தினால்
நான் நின்று விட்டால் ..அப்பப்ப என்ன திட்டு
பணிமனை எனது ஆஸ்பத்திரி
எங்களை நன்றாக பராமரித்தால் மென்மேலும் உழைப்பேன்
எல்லாம் உங்கள்கையில்
அடுத்த தடவை கோபம் வரும்போது
அநீதியை தட்டி கேளுங்கள்
என்னை
உடைக்காதீர் ப்ளீஸ்
Comments
Post a Comment