விதியின் பயணங்கள்
இடம் சென்ட்ரல் ஸ்டேஷன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பு பெட்டி
chennai-madurai
பாத்திரங்கள் : சரளா (நல்ல படிப்பு வேலை -தனி மனுஷி ) கோமதி (இளம் விதவை ) உஷா (அவள் 3 வயது பெண்)
சரளாவும் குழந்தை உஷாவும் சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்
அவள் கதை சொல்ல இவள் கதை கேட்க …களை கட்டியது இடம்
பேச்சுவாக்கில் தெரிந்தது -கோமதியும் கணேஷும் காதல் கல்யாணம் -இரண்டு பெற்றோர்களும் எதிர்ப்பு
3 வருடங்கள் ஆனந்த வாழ்க்கை -பெண் செல்வம் உஷா .
-விதி யாரை விட்டது ….
3 மாதங்களுக்கு முன் கணேஷ் ஒரு சாலை விபத்தில் உயிர் இழந்தான் .
எங்கோ போவது யாரை பார்ப்பது தெரியாமல் திக்குமுக்காடினாள் கோமதி .
கடைசியாக அவள் பெற்றோரிடம் சென்று அபயம் தேடலாம் என்று பயணம் மேற்கொண்டாள் கோமதி .
கோமதிக்கு சரளாவின் சுதந்திர வாழ்க்கைமேல் சற்று பொறாமை ஆனால் தன் பெண் அவளிடம் இவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்கொண்டது மிகவும் பிடித்திருந்தது .
யோசனையில் ஆழ்ந்தாள் …பெற்றோர் அவளை ஏற்றுக்கொள்வார்களா ? அவர்களைப்பற்றி 3 வருடமாக ஒரு தகவலும் இல்லையே
தன்னிடம் இருந்த பேப்பரில் அவள் வீடு அட்ரெஸ்ஸை மீண்டும் பார்த்தாள் .
சரளா :என்ன கோமதி கையிலே
கோமதி:என் பெற்றோரின் விலாசம் .துரதிருஷ்டவசமாக கணேஷின் அப்பா அம்மா வீடு விலாசம் கடைசிவரை அவர் சொல்லவில்லை.வடக்கே எங்கோ மாற்றலாகி போய்விட்டார்கள் என கேள்வி.
………………….
அடுத்த நிமிடம் இடி விழுந்ததுபோல் ஒரு சப்தம்
உலகமே தலை கீழானது .யார் எங்கு எப்படி விழுந்தார்கள் ?
ஓலங்கள் முனகல்கள் அலறல்கள் ..தாங்கமுடியாத வேதனையின் வெளிப்பாடுகள்
சரளா தன்மேல் விழுந்த பெட்டியை சிரமப்பட்டு அகற்றினாள் .கைகால்களை அசக்கி பார்த்தாள் .நல்லவேளை பெரிய சேதமில்லை .உடனே கோமதியின் ஞாபகம் வந்தது- கூடவே உஷாகுட்டி
தேடினாள் தேடினாள் -ஒருவழியாக உஷாவை பெஞ்சுக்கு அடியிலிருந்து வெளியே இழுத்தாள் .
நெற்றியில் சிறு சிராய்ப்பு பரவாயில்லை..கோமதி?
அந்தோ பரிதாபம் …அவள் சாகும் நிலையில் இருந்தாள் .நினைவு தப்புவதற்கு முன்னால் சரளாவிடம் கைகூப்பி வேண்டுகோள் .”என் குழந்தை …இனி அவள் …. உன்னோடு ” ….உயிர் பிரிந்தது .
சில நாட்களுக்கு பின்னர் ….
மறுபடியும் சென்ட்ரல் ஸ்டேஷன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பு பெட்டி
சரளாவும் உஷாவும்—- தாத்தா பாட்டி இருக்கிற இடத்தை நோக்கி அடுத்த பயணம் (விதியின்)
அழகிய குக்க்ராமம் ..பெற்றோர் வீடு —ஊருக்கு ஒதுக்குப்புறமா சிறு வீடு
அப்பா கோவிந்தன் அம்மா அலமேலு
மகளின் மரண சேதி…. ஆழந்த துயரில் இருவரும் .ஆனால் பேத்தி உஷா?
“நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் கஷடப்பட்டு காலம் தள்ளறோம் இதில் பேத்தி ?”
முடியவில்லை அதனால் முடியாது… சொல்ல முடியாத நிலை.
“எதாவது அனாதையாசிரமத்தில் சேர்த்து விடு..உனக்கு புண்ணியமா போகும்.”
சரளா தன் வாழ்க்கையை நினைத்தாள் ..தனி மனுஷி ..சுதந்திர வாழ்வு
உஷாவின் கள்ளம் கபடமற்ற முகத்தை பார்த்தாள் .
அங்கே தன் புது வாழ்க்கையை கண்டாள்
இடம் -சென்ட்ரல் ஸ்டேஷன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பு பெட்டி
சரளாவின் அடுத்து பயணம் குழந்தையுடன்….. ஒரு தாயாக
இனி பயணங்கள் இல்லை …..only sharing and caring
No comments:
Post a Comment