கமலாவின் கல்யாணம்
“சரியான செவ்வாய் தோஷம்” ஜோஸ்யர் வருத்தம் தெரிவித்தார்
“ஏதாவது பரிகாரம்?” பரிதாபத்துடன் அம்மா
“இருக்கே …பேசாமே ஒரு மரத்தோடு கல்யாணம் பண்ணிடுங்கோ ”
“அப்படி ஒரு வழி இருக்கா ஜோசியரே …..இல்லாமே நான் சொல்லுவேனா ”
“ஐஸ்வர்யாராய்க்கும் அப்படி கல்யாணம் நடந்ததாம் .பிறகுதான் அபிஷேக்குடன் கல்யாணம் ”
அம்மா தயங்கினாள் ……”பொண்ணு ஒத்துக்கணமே ..கல்யாணமே வேண்டாங்கற ”
“வேறே வழியில்லை….. தாலி பாக்கியம் நிலக்கணும்னா ….”
“அப்பறம் மரத்தை எரித்துவிடலாம் ”
“அப்போ தோஷம் போயிடுமா ? ….நிச்சயமா
கமலா … பேசாமல் அம்மாவின் கெஞ்சற முகத்தை பார்த்தாள்
எனக்கு இது தேவையா அம்மா ..நான் கல்யாணம் பண்ணிவைனு சொன்னேனா
அதில்லைடி …..இந்த தடவை …
“போறும் அம்மா இதுவரை என்னமெல்லாமோ பார்த்துவிட்டாய் …உன் தெய்வம் கண் திறக்கவில்லை ”
அம்மா அழ ஆரம்பித்தாள் …இனி நிற்காது பொலம்பல் …
சில நாட்களுக்கு பிறகு…கோவிலில்
வாழைமர பந்தல் …மணமகள் கமலா ..மா இல்லை வாழைப்பிள்ளை
தாலி கட்டியாச்சு …”அப்பாடா ” அம்மாவின் நிம்மதி .வாழை எரிக்கப்பட்டது .
கமலா காத்திருக்கிறாள் ….
note:
Indians pay special attention to astrological compatibility. If a bride is born “manglik,” or Mars-bearing, she is considered to be cursed and cause an early death to her husband. According to an old Hindu custom, the only way to break curse for a bride is to marry a peepal or banana tree! Yes, a tree!!! The tree is then destroyed, and the curse is broken. A bride can also marry a silver or golden idol of the Hindu God Vishnu.
The current Indian constitution, however, assesses such practices as illegal because they believed to violate the rights of women, who are already oppressed enough in the country.
There was even a lawsuit filed against Aishwarya Rai, the Indian film star and a former Miss World, for following this tradition and marrying a tree. Apparently, her astrological sign was incompatible with that of her fiancé, Abhishek Bachchan, a Bollywood star.
The Indian human rights activists, who filed the lawsuit, demanded Miss Rai and her family to offer a public apology for promoting the caste system and contributing to further violations of women’s rights in the country.
Source:Bollywood hungama