May 2017
உறவுகளுக்கப்பால்…….
சே இந்தக்கிழத்தின் லொக்லொக் இருமல் தாங்கமுடியலே
என் தலையெழுத்து ..வீட்டுக்கு ஒரே பிள்ளை
(நான் மாடு மாதிரி ஒரே மாட்டுப்பெண் கிரிஜா )
கேர்-taker போடலாம்னா … செலவு ….அவளையும் சேர்ந்து கவனிக்கணும்
டயபர் மாத்தியே பாதி பொழுது போயிடும் (செலவு இழுத்துண்டே போறது )
மத்தது பத்தி கேக்கவே வேண்டாம் —(அப்பப்பா நாற்றம் தான் ஸஹிக்கலை )
நல்ல வேளை தானே தண்ணி மொண்டு குளிச்சுகிறது
சாப்பாடு -பெரும் கூப்பாடுதான்
காரம் ஆகாது ,ரசம் கொழம்பு வேண்டாம் ..மோருஞ்சாதம் போறுமாம்
காஞ்ச நார்த்தங்காய் கையில் stock இல்லேன்னா போச்சு
தோசைக்கும் இட்லிக்கும் தயிர் ஈஸ்வரா -பால் என்ன விலை ம்ம்ம்
வரேன் வரேன் —–கூப்பிட்டகுரலுக்கு ஓடணும்
…………….
கிழவி இப்போது படுத்த படுக்கை –எல்லா சமாச்சாரமும் அங்கேதான்
கைகால் விட்டுபோச்சுப்பா
அவருக்கென்ன ஆபீசே கதி
நிர்விசாரமா என்னவோ
கண்டிப்பா ஆள் போட சொல்லணும்
தாளாது
சின்னத்திரையில் சீரியல்
“மாமியாரும் ஒருநாள் மாட்டுப்பெண்ணே ”
மாமியாருக்கு உடம்புக்கு வரும்போது மாட்டுப்பெண் குறிப்பறிந்து சேவை செய்கிறாள்
மாமியார் முனகல்— அடி ஜானு ..நான் மாட்டுப்பெண்ணா இருந்தப்போ மனசே இல்லாமே தான் மாமியாருக்கு சிச்ருஷை பண்ணினேன் .நீ எப்படி மொகம் கோணாமல் இருக்காய் .
மாட்டுப்பெண்: நானும் ஒருநாள் மாமியார் ஆவேனல்லவா அதை நினைச்சு பார்த்துப்பேன்
எங்கம்மாவும் ஒரு மாமியார்தானே ………அம்மாவுக்கும் மாமியாருக்கும் என்ன வித்யாசம் ?
அன்பு பாசம் வேண்டுகிற ஜீவன்கள்
கிரிஜா யோசிச்சாள்
தன் அம்மாவும் யாரோ ஒருத்திக்கு மாமியார் அல்லவா
அம்மா என்ன பாடுபடறாளோ வேண்டாவெறுப்பாக சேவை செய்யும் மன்னி……..
கிரிஜாவுக்கு ஞானோதயம்
மாமியார் தாய் உறவுகளுக்கப்பால்….முதிர்ந்த பெண்மை
அம்மா -(மாமியாரை )
என்னை மன்னிச்சுடுங்கோ
ஏதுக்கடி
அது அப்படித்தான்
அன்று இல்லை அப்போது முதல் கிரிஜா மனுஷியானாள்
No comments:
Post a Comment