Wednesday, September 24, 2025

காவேரி



காவேரி

காவேரியும் சீனு(அம்பி)உம் காவிரிக்கரை அருகே மணல்விளையாட்டு

அவள் கட்ட அவன் தட்ட மீண்டும்மீண்டும் வீடு கட்டப்பட்டது


ஏன்டா அம்பி இப்படி அழிச்சிண்டே இருந்தேயானால் எப்போ வீடு கட்டறது எப்போ நாம குடிபோறது?

அம்பி சிரித்தான் ஏன்டா சிரிக்கிறே

மணல் வீட்டிலே யாராவது இருப்பாளா

காவேரி -பொம்மை சோப்பு வைச்சு விளையாடலாம்டா

போடி போடி பயத்தாரி நீ இன்னும் குழந்தையா

ஆமாடா எனக்கு 10 வயசுதான் ஆறது

அம்பி சிரித்தான் “நாளைக்கு ஒன்னைப்பார்க்க மாப்பிள்ளை வரான் தெரியுமோன்னோ ”

நேக்கு ஒண்ணும் கல்யாணம் வேண்டாம்

பின்னே எப்போதும் காவேரி பக்கத்திலே இருந்துடுவாயா

எனக்கு படிக்கணம்

படிச்சுட்டு ?

வேலைக்கு …

சிரியோசிரி

பட்டணத்து பொண்ணு ன்னு நெனைப்போ

———–

காவிரிக்கரை இருக்கு

கரைமேல் பூவிருக்கு

பூப்போலே பொண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு

————–

காவேரிக்கு அந்த மாப்பிளை அமையவில்லை அடுத்தது அடுத்தது ம்ம்ம்ம்

தகப்பனார் இறந்தார் -குடும்பம் பட்டணம் சென்றது

காவேரியும் படித்தாள் படித்தாள் -வேலை கிடைத்தது

மனதில் காவேரி ஓடிக்கொண்டே இருந்தாள்


நெஞ்சிலேநினைவிருக்கு …


காவேரிக்கு கல்யாணம் நடந்தது

மாப்பிளையுடன் காவேரி ஸ்னானம்

நெருங்கிவந்தால் சுகமிருக்கு ..


விதி யாரை விட்டது

மாப்பிள்ளை ஆத்தோடு போனான்

காவேரியின் வாழ்வும் மூழ்கியது


காலம் கனிந்தது

மறுபடியும் காவிரிக்கரை

காவேரி தனியே –கைகள் மணலை அள்ளுகிறது

வெள்ளம்போல் நினைவிருக்கு

ஒரு நிழல் படிகிறது

யாரு …

யாரு …

சீனு ?

ஆமா அம்பிதான்

நா … கேள்விப்பட்டேன்

என்னுடன் வருகிறாயா

எங்கே

சொன்னாதான் வருவாயா

இல்லை …

கையைபிடித்தான்

கைபிடித்தான்

காலம் குனிந்து வணங்கிற்று

கண்கலந்தால் வார்த்தையில்லை

No comments:

Post a Comment

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனி...