பெண் காணல்
நான் மகேந்திரன் -24 வயது – நல்ல படிப்பு நல்ல வேலை (சம்பளம்)
நாளை பெண் பார்க்க போகிறேன் அண்ணா மாமாவுடன்
இன்று கலர் கனவுகள் -அவள் எப்பிடி இருப்பாள் (போட்டோ வைத்து சொல்லமுடியாது -photoshop வைத்து என்ன வேணாலும் பண்ணலாம்)
குழந்தை/கள் ஊம்ஹூம் 4 வருடம் ஆகட்டும்..வாழ்க்கையை enjoy பண்ணிட்டு அப்புறம்
பார்க்கிறதுக்கு நன்னா இருந்திட்டு பழக்கறதுக்கு சுமார் என்றால் ..கஷ்டம்
எப்படி தெரிந்து கொள்வது ..வெளியே கூட்டிக்கொண்டு போக அனுமதிப்பார்களா?
தனியே பேசும்போது என்ன கேட்கலாம் ..லிஸ்ட் ரெடி பண்ணலாம்
குழந்தைகள்/அவள் வேலை (போகணுமா விடணும் எப்போ ?)
தனியா கூட்டா (குடும்பம்)
என்ன tastes ..likes ..விருப்பு வெறுப்புகள்
இதெல்லாம் கேட்க time கிடைக்குமா?
விடிந்தது ..நேரம் போனது .மணி 4 .
நான் ரெடி ..சொல்லாமலே அலங்காரம் காண்பித்துவிட்டது
அண்ணாவும் மாமாவும் சிரித்தார்கள் — அவசரத்தை பாரு
பெண் வீட்டில்..
சம்பிரதாய பேச்சு
காபியுடன் அவள் …
கீழ்நோக்கிய பார்வை ..நன்றாகத்தான் இருக்கிறாள்
சம்மதம்
தாலிகட்டும் வேளை.எங்கள் சம்பிரதாயப்படி முகத்திரை தாலி காட்டும் வரை.
கட்டினேன்..திரை விலகியது
ஐயோ ஆள் மாறாட்டம் குரூபி இவள் அவளல்ல
அண்ணா மாமா ..
சும்மா இருடா தாலி கட்டியாச்சு இப்போ ஒன்னும் பண்ண முடியாது சும்மா இரு
இல்லை இல்லை
அண்ணா-அவர்கள் கொடுத்த வரதக்ஷிணை தான் என் தேர்தல் fund .அடங்கி இரு
மாட்டேன் மாட்டேன்
பெண்ணை கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்
நான் நேரே ஸ்டேஷன் சென்று மும்பை train
1 வருடம் குடியின் பிடியில் -என் கேர்ள் friend சப்போர்டுடன்
ஒருநாள் விடியற்காலை பெல் அடித்தது
அண்ணா மாமா –என்ன இந்நேரம்
ஒரு பெண்ணை உள்ளே கொண்டுவந்து விட்டார்கள் -அவள் -குரூபி
உன் மனைவியை கொண்டு வந்தாச்சு இனி உன் பாடு
அவர்கள் போய் விட்டார்கள்
வெளியே போ -எங்கு போவேன் அழுகை
நண்பி சொன்னாள் வீட்டை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு போகட்டுமே
சரிசரி மூலையில் கிட
1 வருடம் போயிற்று
நான் அலுவலகம் -போன் கால் -உன் வீடு தீ பிடித்து எரிந்து விட்டது
உள்ளே அவள் கருகினாள்.. கருகிவிட்டாள்
3 வருடங்கள்…
அண்ணா இப்போது மந்திரி
நடுநடுவே என்பெயரில் அபவாதம்
மனைவியை எரித்தவன்
இன்று அண்ணா மும்பை பிரவேசம்
பாராட்டு விழா மக்கள் நாயகன்
பேசினான் ..
வரதட்சினை கொடுமை
bride -burning என்றெல்லாம்
கை தட்டல்
நான் வெகுண்டெழுந்தேன்
நீயெல்லாம் வரதட்சினை கொடுமை பற்றி பேசுவதா வெட்கம் வெட்கம்
அண்ணா என்னை பார்த்தார் ..நெஞ்சை பிடித்தார் சுருண்டார் மேடையில்
நான் வெளியேறி மனநோய் மருத்துவ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்
அங்கு பத்திரிகை
நேற்று மாலை திடீரென மேடையில் மயங்கி உயிர் விட்டார் மந்திரி
இன்று இரங்கல் விழா
No comments:
Post a Comment