Wednesday, September 24, 2025

தொலைத்து கிடைத்தது

 

தொலைத்து கிடைத்தது

ஆயிற்று இன்றுடன்

13 வருடம்

என் கண்மணியை நான் தொலைத்து

கூடத்தில் விளையாடிய குழந்தை

நான் உள்ளில்

திடீரென மௌனம்

யோசிக்க நேரமில்லை

கூடத்திற்கு தாவினேன்

செல்வியை காணவில்லை

வாயிற் கதவு திறந்து கிடந்தது

முடிந்தது

தேடல் அழுதல்

காத்திருத்தல்

13 வருடம்

நேற்று சந்தையில்

ஒரு 16 வயது பெண் குழந்தையின் கழுத்தில்

ஒரு லாக்கெட்

எனக்கு நன்கு பழக்கப்பட்ட செயின்

அம்மா உன் பெயர் என்ன

செல்வி

இந்த லாக்கெட்டை

நான் பார்க்கலாமா

திறந்தாள்

அவள் குழந்தையின் உருவம்

யாரம்மா இது

நான்

உன் அம்மா

அழுகை

என்ன குப்பைத்தொட்டியில் போட்டாளாம்

சித்தி சொன்னா

அங்கே ஒரு பெண்மணி வர இவள் ஒதுங்கினாள்

அந்த பெண் குழந்தையுடன்

மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில்


பிறகு…

போலீஸ் விசாரணை கைது

அந்த செல்வி இந்த தாயின் மகள் ஆனாள்

உண்மை தெரிந்தது

ஏன் கடத்தினாள்

குழந்தை பாக்கியம் இல்லை


என் செல்வி கிடைத்தாள்

இறைக்கு நன்றி

ஒரு வேண்டுதல்

என்னை போல்

குழந்தைகளை தொ

லைத்த

சகல அம்மாக்களுக்கும்

அருள் புரிவாய்


No comments:

Post a Comment

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனி...