Posts

தனிமை

  அரசை துறந்த siddarthan புரிந்து கொண்டதுபோல் வாழ்க்கையின் மூல தத்துவம் அண்ணன் மனைவி செல்வம் அந்தஸ்து எல்லாம் ஒருவனை சூழ்ந்திருந்தாலும் மனிதன் அடிப்படையில் தனிமையானவன் அவன் கணக்கை அவன்தான் தீர்க்கவேண்டும் அவன் எண்ணங்களோடு ,பயங்களோடு ,ஆசைகளோடு அவன் தான் தனியாக வாழவேண்டும் . அவன் உண்ணும் உணவை அவனேதான் ஜீரணிக்கவேண்டும் படவேண்டிய கவலைகளை அவனேதான் படவேண்டும் . உறவு உதவாது சமயத்தில் அவனுக்கு உடலும் உதவாமல் வம்பு செய்யும் தனிமை

தாத்தா பேத்தி

  தாத்தா பேத்தி நடை பயணம் பேத்தியை ப்ராமில் தாத்தா நடத்தி சென்றார் போக வர எல்லாருக்கும் டாடா அவர்களும் புன்னகையோடு கவலைகளுக்கு சிறிதுநேரம் டாடா மனிதர்கள் இல்லா வீடுகள் பறவைகள் இல்லா மரங்கள் தாத்தா பேத்தி பார்வையில் வழியில் நாய் மாடு காக்கா பேத்தி குதூகலம் தாத்தா கை சோர்வு மனம் நிம்மதி இறைக்கு நன்றி வாழ்வில் இந்த பாக்யத்துக்கு தாத்தா பேத்தி பயணம் தொடருமா?

Student nun

 student nun anything in extreme……… aditi is studying in8th standard in a prominent school in mumbai she is a jain. born to a life of religious rituals fasting her father encouraged his two daughters to participate in religious activities, earning him pride within his community. While their school was among Mumbai’s top-most schools, he didn’t insist they go regularly because religious education at home was a priority. her elder sister Bhavna has already become a nun in a sub sect ofthe main swetambara sect when she was 18 bhavna decided tolive the life of a nun her parents prminent busness family and grandparents agreed to her calling.they felt proud that their family will be in the limelight during the summer school vacations this year, bhavna was packed off for two months to a school in Gujarat, where disciples enroll to attain nunhood. after due preparation she completed the ritual of renunciation or initiation – dīkṣā and the ritual of keśa-loca – ‘pulling out of th...

முடிந்த உறவு

  முடிந்த உறவு அவள் மனசு அவனிடம் இல்லை உணர்ந்ததும் அதிர்ச்சி ஈகோவுக்குக் சவுக்கடி கல்யாணமாகி குழந்தைகளை பெற்று வளர்த்து …….. 20 வருஷத்துக்கு அப்புறம் இது மற்றவன் …என்ன லயிப்பு அவனிடம்? சரி…. ஒட்டாத வாழ்க்கைதான் இத்தனை நாள் ஆனாலும்… போதிமரம் …… பாவம் ஓடா உழைச்சிருக்கா இத்தனை வருஷம் அவளும் மநுஷி தானே இந்த உறவு முடிந்தாலும்.. அந்த உறவு தொடரட்டுமே 

வில்லாக்களின் பேச்சு

 வில்லாக்களின் பேச்சு ஒரு பெரிய பங்களா …இப்போ வில்லா சொல்லுவார்கள் பக்கத்தில் புதுசா கட்டப்பட்ட இன்னொரு பங்களா ஆள் நடமாட்டமே இல்லை முதல்வன் :ஏம்ப்பா என்ன செய்யிர இரண்டமவன் :க்கும் என்ன செய்ய முனிவர் சொன்னமாதிரி செய்யிறேன் அதுஎன்னப்பா சும்மா இருக்கேன் ..ஆமா நீ? பரம சுகம் ..ஒரு சலனமில்லை சப்தமில்லை எதுக்காக கட்டப்பட்டோம்? சுய திருப்தி ,பணபலத்தை வெளிப்படுத்த ஒரு வழி இரண்டு வீட்டிலும் சேர்ந்து 40-50 பேர் வசிக்கலாம் அல்லவா தாராளமா அதற்கு மற்றவர் சொந்தபந்தம் இல்லையே அப்படியே இருந்தாலும் நெருங்கிய சொந்தம் இல்லையே அப்பா அம்மா வையாவது…. அவர்கள் இல்லத்தில்(முதியோர்) சௌக்யமாக இருக்கார்கள் நீயும் நானும் ..நம்மைப்போல் பலரும் பக்கத்திலும் எதிரிலும் இது upper class neighbourhood வில்லாக்கள் வசிக்கலாம் மனிதர்கள் ? அவர்களுக்கும் உண்டு புறாக்கூண்டுகள் குடிசைகள் நடைபாதை பணத்திமிரின் மௌனசாட்சிகள் நாம்

அவள் அவன் கடற்கரை

  அவள் அவன் கடற்கரை அவள் :இப்படியே இருந்தா அவன்:இருந்தா ? அவள்:காத்திருந்தவன் காத்திருக்க … அவன்:நடக்க விடுவேனா அவள்:என்ன கிழிப்பேள் அவன்:என்ன பண்ணட்டும் அவள்:என்னை கேளுங்கள் ஒண்ணுத்துக்கும் துப்பில்லை அவன்:என்னடி பட்டு உன் சொந்தக்கார பையனைத்தான் என்று நீ உன் பெண்ணோ தனி வழி …நான் முழிக்கிறேன் அவள்:நீங்கள் எடுத்து சொன்னால் கேட்பாள் அவன் :எனக்கு தோணலை ..இந்தக்காலத்து பொண்ணு இருவரும் கவலையில் பெண் வந்தாள் என்ன ஜோடி போட்டு பீச்சில் ? நீ எங்கே இங்கெ ? எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சாச்சு அவன் அவள் நிம்மதி பிரச்சினை (இப்போதுக்கு ) தீர்ந்தது

Translation 1

 அக்னியின் தாகம் Catastrophe வாரணாசி மாவட்டத்தில் bira என்ற கிராமத்தில் புங்கி என்ற கோண்ட் பெண்மணி ( வயதான , குழந்தை இல்லா விதவை) வசித்து வந்தாள் . வீடு வாசல் இல்லாதவள் .கோதுமை போன்ற தான்யங்களை காயவைத்து மக்களுக்கு விற்று ஜீவனம் நடத்தி வந்தாள் .பதிலுக்கு கிடைத்த தான்யங்களை அரைத்து பொரித்து சாப்பிட்டு வந்தாள் . அவள் குடிசையில் ஒரு ஓரம் காய வைக்க அடுப்பு மறு ஓரம் அவள் படுக்கை . அதிகாலையில் எழுந்து இலைகளை சேகரித்து அடுப்புக்கு பக்கத்தில் வைத்துவிடுவாள். மதியம் அடுப்பை பற்ற வைப்பாள் . ஆனால் பண்டிட் உதய பான் பாண்டேயின் (கிராமத்திற்கு சொந்தக்காரன் ) தான்யங்களை காயவைக்கும் அன்று பட்டினியோடு உறங்குவாள். சம்பளம் இல்லா வேலைக்காரியாக அவருக்கு சேவகம் செய்ய கட்டாயம் .தண்ணியும் கொண்டு விடவேண்டும் .இந்த காரணத்தினால் சில நாட்கள் அவள் அடுப்பு எரியாது .பாண்டேயின் கிராமத்தில் வசித்ததனால் அவளிடம் சில்லறை வேலைகளை வாங்க அவருக்கு அதிகாரம். சாப்பாடு தான் போடுகிறோமே அது எப்படி சம்பளம் இல்லா வேலையாள் என்று கூறலாம்?(பாண்டே ) அங்கு வசிக்க அனுமதித்ததே பெரிய உபகாரம் அது வசந்த காலம் .எல்லோரும் ...