Showing posts with label அவள் அவன் கடற்கரை. Show all posts
Showing posts with label அவள் அவன் கடற்கரை. Show all posts

Wednesday, September 24, 2025

அவள் அவன் கடற்கரை

 

அவள் அவன் கடற்கரை


அவள் :இப்படியே இருந்தா

அவன்:இருந்தா ?

அவள்:காத்திருந்தவன் காத்திருக்க …

அவன்:நடக்க விடுவேனா

அவள்:என்ன கிழிப்பேள்

அவன்:என்ன பண்ணட்டும்

அவள்:என்னை கேளுங்கள் ஒண்ணுத்துக்கும் துப்பில்லை

அவன்:என்னடி பட்டு உன் சொந்தக்கார பையனைத்தான் என்று நீ

உன் பெண்ணோ தனி வழி …நான் முழிக்கிறேன்

அவள்:நீங்கள் எடுத்து சொன்னால் கேட்பாள்

அவன் :எனக்கு தோணலை ..இந்தக்காலத்து பொண்ணு

இருவரும் கவலையில்

பெண் வந்தாள்

என்ன ஜோடி போட்டு பீச்சில் ?

நீ எங்கே இங்கெ ?

எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைச்சாச்சு

அவன் அவள் நிம்மதி

பிரச்சினை (இப்போதுக்கு ) தீர்ந்தது